TRINCO NEWS
Search

அதி கூடிய சேமிப்பு நினைவக வசதியுடன் வரும் iPhone 7 Plus

அப்பிள் நிறுவனம் புதிய வெளியீடு என்றாலே உலகத்தில் அனைத்து பாகங்களிலும் இருக்கும் மக்களுக்களுக்கு பாரிய எதிர்பார்ப்பு இருக்கும்.

அந்ந வகையில் உலகின் முதல் தர ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்து அறிமுகம் செய்யும் அப்பிள் நிறுவனம் புதிய கைப்பேசிகளை அறிமுகம் செய்யும்போது புதிய வசதிகளையும் பயனர்களுக்காக அறிமுகம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது.

இதன் ஒரு அங்கமாக எதிர்வரும் காலத்தில் வெளியிடவுள்ள iPhone 7 Plus ஸ்மார்ட் கைப்பேசியில் 256GB சேமிப்பு கொள்ளளவினை வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது வரை அந்நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள கைப்பேசிகளுள் அதி கூடிய சேமிப்பு நினைவகமாக 256GB வரையே காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இது தவிர 3100 mAh உடைய நீடித்து செயற்படக்கூடிய மின்கலத்தினையும் இந்த கைப்பேசியில் முதன் முறையாக இணைத்து அறிமுகம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *