TRINCO NEWS
Search

இளவரசர் சார்ல்ஸின் அறக்கட்டளையின் 40 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு ஆவணப்படம்

பிரித்தானிய இளவரசர் சார்ல்ஸிற்கு சொந்தமான அறக்கட்டளையின் 40 ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட ஆவணப்படம் ஒன்றில் தோன்றிய இளவரசர் வில்லியம் இரு குழந்தைகளுக்கு தந்தையாகியுள்ளமை தன்னை மிகவும் உணர்வுபூர்வமிக்க ஒருவனாக மாற்றியுள்ளதனை இதயபூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் தான் வெகு விரைவில் சிறு விடயங்களுக்கும் வருந்துவதாக தெரிவித்த வில்லியம், ‘தந்தை’ எனும் நோக்கில் தான் விடயங்களை கையாள்வதே இதற்கு காரணம் என தெரிவித்தார்.
மேலும், வாழ்க்கை என்பது விலைமதிப்பற்றது என்பதனையும் தான் நன்கு உணர்ந்துகொண்டதாக வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். அரச வம்சத்தில் உள்ளமையாலும் பாரிய பொறுப்புக்கள் உள்ளமையினாலும் நாட்டிற்கு நேரம் செலுத்துவதனால் தனது சொந்த குழந்தைகளை கவனிக்க நேரம் இல்லாமல் இருப்பதாக இளவரசர் வில்லியம் மனமுருக தெரிவித்துள்ளார்.

குறித்த ஆவணப்படத்தில் தோன்றிய இளவரசர் வில்லியமின் தந்தையிடம் அவரது பேரக்குழந்தைகளை கவனித்துக்கொள்ளும் பணி அவரிடம் ஒப்படைக்கப்படுமேயானால் அது குறித்து அவரது மனநிலை எவ்வாறு இருக்கும் என அவரிடம் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த சார்ல்ஸ் ‘எனது பேரக்குழந்தைகளை கவனிக்கும் பொறுப்பு என்னிடம் கையளிக்கப்படுமேயானால் தயக்கம் எதுவுமின்றி அந்த பொறுப்பை நான் ஏற்றுக்கொள்வேன்’ என அவர் புன்னகையுடன் தெரிவித்தார்.

இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹெரி போன்றோர் இனிவரும் காலங்களில் குறித்த அறக்கட்டளையை தொடர்ந்து நடத்துவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறக்கட்டளையானது தொழில் அற்றவர்களுக்கு தொழில் வாய்ப்புக்களை பெற்றுக்கொடுப்பது மற்றும் பயிற்சிகள் அளிப்பது போன்ற செயல்களை செவ்வனே மேற்கொண்டு வந்துள்ளது. ஏறக்குறைய 825000 இளவயதினருக்கு குறித்த அமைப்பு மூலம், தொழில் வாய்ப்புக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *