TRINCO NEWS
Search

ஏழைகளுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றவில்லை: ராகுல் காந்தி

மத்திய அரசு ஏழைகள் மற்றும் மாணவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தேர்தலின்போது ஏழை மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் எதனையும் மோடி நிறைவேற்றவில்லை என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் சார்பில் திருவனந்தபுரத்துக்கு பேரணி நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விவசாயிகளுடனோ, தொழிலாளர்களுடனோ இருப்பதை நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. அதுபோன்ற புகைப்படங்கள் கூட வெளியானது இல்லை.

மக்களிடையே இடையே பிரிவினையை ஏற்படுத்தியும், நாட்டின் பலதரப்பட்ட மக்களிடையே வெறுப்புணர்வை வளர்த்தும் பிரதமர் பதவியை அவர் அடைந்துள்ளார். 2014 ஆம் ஆண்டு தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் மோடி பிரதமராகிய பின்னர் நிறைவேற்றவில்லை.

கேரளத்தில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியுள்ளது. காங்கிரஸ் அரசு மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் பொய்யானவை’ என்றார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *