TRINCO NEWS
Search

கனடாவுக்குள் சிரிய அகதிகளை உள்வாங்குவதில் 1.2 பில்லியன் டொலர் செலவு

கனடாவுக்குள் 25 ஆயிரம் சிரிய அகதிகளை கொண்டு வரும் லிபரல் அரசின் திட்டத்திற்கு அடுத்த ஆறு ஆண்டுகளில் 1.2 பில்லியன் டொலர் செலவு ஏற்படுமென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கசியவிடப்பட்ட கனேடிய அரச ஆவணம் ஒன்றில் இருக்கும் தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டன. நடப்பு நிதியாண்டில் மட்டும், 876.7 மில்லியன் டொலர் பணம் தேவைப்படுமென அந்த ஆவணம் குறிப்பிடுகின்றது.

இந்த விடயம் குறித்துக் கருத்துக் கேட்டபோது, கசியவிடப்பட்ட ஆவணங்கள் குறித்துக் கருத்து வெளியிடும் வழக்கம் அரசுக்கு இல்லையென குடிவரவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

25 ஆயிரம்; அகதிகளை இந்த ஆண்டின் இறுதிக்கு முன்பாக கனடாவுக்கு அழைத்து வருவதற்கான திட்டத்தின் விபரங்களை கனேடிய அரசு விரைவில் வெளியிடுமென எதிர்பார்க்கப்படுகின்றது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *