TRINCO NEWS
Search

திருகோணமலை.மொறவெவ பகுதியில் மரை இறைச்சி வைத்திருந்தவருக்கு தண்டம்

திருகோணமலை.மொறவெவ பகுதியில் மரை இறைச்சி 16 கிலோ கிராமை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு 20000/= இருபதாயிரம் ரூபாய் தண்டம் செலுத்துமாறு இன்று (08) திருகோணமலை நீதிமன்ற நீதவான் விஷ்வந்த பெர்ணான்டோ உத்தரவிட்டார்.
இவ்வாறு தண்டம் விதிக்கப்பட்டவர் மொறவெவ.டி-01 பகுதியைச்சேர்ந்த கோபால் இலிங்கராஷா (35 வயது) எனவும் தெரியவருகின்றது.
வீட்டில் மரை இறைச்சி விற்பனை செய்து வருவதாக பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 ற்கு வழங்கிய தகவலையடுத்து விரைந்த பொலிஸார் 16 கிலோகிராம் மரை இறைச்சியை மீட்டுள்ளதுடன் சந்தேக நபரையும் கைது செய்யதனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *