TRINCO NEWS
Search

நிர்த்தியாஞ்சலி நாட்டிய விழா

மத்திய மாகாணத்தை மையமாக கொண்டு இயங்கும் நிர்த்திய கலாலயத்தின் 21 ஆவது நிர்த்தியாஞசலி நாட்டிய விழா கம்பளை விக்கிரமபாகு தேசிய பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக உடபலாத்த பிரதேச சபை செயலாளர் இந்திக அநுராத பியதாச, கம்பளை வலயக் கல்விப் பணிப்பாளர் ஆனந்த பிரேமசிறி, கம்பளை பொலிஸ் அத்தியட்சர் சமந்த விஜயசேகர, கம்பளை பொலிஸ் உதவி அத்தியட்சர் அநுருத்த ஹக்மன ஆகியோர் கலந்து கொண்டனர்.


இந்த நிர்த்தியாஞ்சலி நிகழ்வில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்கள் பங்கு பற்றி நடனங்கள் ஆடியமை ஒரு சிறப்பு அம்சமாக காணப்படுவதுடன் இச் செயற்பாடு மாணவர்களிடையே இன ஒற்றுமையையும் உருவாக்கிய நிகழ்வாக கருதப்படுகின்றது. இதனை பார்வையிடுவதற்கு மூவின மக்களும் கலந்து கொண்டிருந்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *