TRINCO NEWS
Search

பயங்கரமாக மோதிய இரு குத்துச்சண்டை வீரர்கள்; பரிதாபச் சாவடைந்த தமிழ் வீரர்!

சிங்கப்பூரில் நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி ஒன்றில் பங்கேற்ற தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நேற்றைய தினம் சிங்கப்புரில், Asia Fighting Championship (AFC) நிகழ்வில் இடம்பெறுவதற்காக குத்துச்சண்டை போட்டி நடைபெற்றுள்ளது.
பிரபல வீரரான ஸ்டீவன் லிம் என்பவர் இந்தப் போட்டியில் பங்கேற்றிருந்தார். இவரை எதிர்த்து தமிழ் வம்சாவழித் தமிழரான பிரதீப் சுப்ரமணியன் பங்கேற்றுள்ளார்.

போட்டி தொடங்கியதும் பரஸ்பர தாக்குதல் ஆரம்பமானது. இதில் பலத்த தாக்குதலுக்கு உள்ளான பிரதீப் போட்டி மேடையிலேயே சரிந்து விழுந்துள்ளார்.

உடனடியாகச் செயற்பட்ட முதலுதவிக்குழு, பிரதீப்பை மருத்துவமனையில் அனுமதித்தது. அங்கே மாரடைப்பு மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு பிரதீப் உயிரிழந்துள்ளார்.

இந்த பரபரப்பான சம்பவம் குறித்துப் பேசிய போட்டி ஏற்பாட்டாளர்கள், ”விளையாட்டு தொடங்குவதற்கு முன்னதாக இருவரிடமும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆனால், விளையாட்டு போட்டியில் பங்கேற்க இருந்த வீரர் ஒருவர் விலகி கொண்டதால், அந்த இடத்தில் பிரதீப் விளையாட சம்மதம் தெரிவித்துள்ளார். இந்த முடிவானது மிக குறுகிய காலத்தில்தான் மேற்கொள்ளப்பட்டதாகும்.” என்றனர்.

இருப்பினும் இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பிரதீப்பின் விரிவான பிரேத பரிசோதனை முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என விளையாட்டு ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை உயிரிழந்த பிரதீப்பிற்கு அவரை எதிர்த்து சண்டையிட்ட ஸ்டீவன் லிம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

59c8b6226f7d1-IBCTAMIL

59c8b6228e359-IBCTAMIL

59c8b622c1379-IBCTAMIL




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *