TRINCO NEWS
Search
wpid-wp-1471952004908.jpg

வயிற்­றி­லி­ருந்து 40 கத்­தி­கள்

இந்­தி­யாவைச் சேர்ந்த நபர் ஒரு­வரின் வயிற்­றி­லி­ருந்து 40 கத்­தி­களை சத்­தி­ர­சி­கிச்சை மூலம் மருத்­து­வர்கள் அகற்­றி­யுள்­ளனர்.

 

 

42 வய­தான ஜேர்னைல் சிங் எனும் இந் ­நபர்,  உலோ­கத்­தா­லான மேற்­படி 40 கத்­தி­க­ளையும் விழுங்­கி­யி­ருந்தார் என தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

 

சில தினங்­க­ளுக்கு முன் இவ­ருக்கு கடு­மை­யான வயிற்­று­வலி ஏற்­பட்­ட­தை­
ய­டுத்து, பஞ்சாப் மாநி­லத்தின் குர்­தாஸ்பூர் நக­ரி­லுள்ள வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

 

தான் கத்­தி­களை விழுங்­கு­வதை வழக்­க­மாகக் கொண்­டி­ருந்­ததாக அவர் கூறினார். ஆனால், ஒன்­றல்ல, இரண்­டல்ல 40 கத்­திகள் இவரின் வயிற்றில் இருப்­பதை அறிந்து மருத்­து­வர்கள் பெரும் வியப்­ப­டைந்­தனர்.

 

கத்­தி­களின் “சுவை” தனக்குப் பிடித்­தி­ருந்ததால் அவற்றை தான் விழுங்­கி­ய­தாக ஜேர்னைல் சிங் கூறினார் என மருத்­துவர் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

 

 

கடந்த வாரம் சத்­தி­ர­சி­கிச்சை மூலம் மேற்­படி கத்­திகள் அகற்­றப்­பட்­டன. சுமார் 5 மணித்­தி­யா­லங்கள் இச் ­சத்­தி­ர­சி­கிச்சை நீடித்­தது.

 

“எனது மருத்­துவப் பணியில் இவ்­வா­றான ஒரு விட­யத்தை நான் ஒரு போதும் கண்­ட­தில்லை என இச் சத்­தி­ர­சி­கிச்­சையை மேற்­கொண்ட மருத்­து­வர்­களில் ஒருவர் தெரி­வித்­துள்ளார்.

 

தற்போது வைத்திய சாலையில் தங்கியுள்ள ஜேர்னைல் சிங், இன்னும் சில தினங்களில் வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப் படுகிறது.

 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *