TRINCO NEWS
Search

கிரிக்கெட்டில் ஒரே ஆட்டத்தில் 1000 ஓட்டங்களை கடந்து உலக சாதனை படைத்த 15 வயது சிறுவன்!

கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக 323 பந்துகளில் 1009 ஓட்டங்களை எடுத்து 15 வயது கிரிக்கெட் வீரர் உலக சாதனை படைத்துள்ளார்.
மும்பை கிரிக்கெட் சங்கம் நடத்தும் ஹெச்.டி பண்டாரி கோப்பைக்கான பள்ளி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டியில் நேற்று கே.சி காந்தி பள்ளி அணியுடன் ஆரிய குருகுல அணி மோதியது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்து ஆடிய கே.சி. காந்தி பள்ளி அணி வீரர் பிரணவ் தாணவாடே ஒரே இன்னிங்சில், 1009 ஓட்டங்களை 323 பந்துகளில் அடித்து சாதனை படைத்துள்ளார். இவரது 1000 ரஓட்டங்களில் 129 பவுண்டரிகளும் 59 சிக்சர்களும் அடங்கும்.

மேலும், இவர் இந்த போட்டியில் ஆட்டமிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1899ம் ஆண்டு ஏஇஜே காலின்ஸ் என்ற வீரர் 628 ரஓட்டங்களை குவித்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

அணியின் ஓட்டங்கள்1465 என எட்டியபோது காந்தி மேனிலைப்பள்ளி இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

எனவே காந்தி மேனிலைப்பள்ளி அணி எடுத்த ஓட்டங்களும் ஒரு உலக சாதனை ஆகும்.

கடந்த 1926-ம் ஆண்டு நியூசவுத்வேல்ஸ் அணிக்கு எதிராக விக்டோரியா 1,107 ஓட்டங்களை எடுத்ததே முந்தைய சாதனையாக இருந்தது.

பிரணவ் தாணவாடேவின் தந்தை ஆட்டோ ஓட்டுநர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரணவ்வின் இந்த இமாலய சாதனையில் நெகிழ்ச்சியடைந்துள்ள மும்பை கிரிக்கெட் சங்கம் இவரது முன்னேற்றத்துக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

மேலும், அவனது பயிற்சி மற்றும் கல்விக்குரிய செலவுகளை மகாராஷ்டிரா அரசே ஏற்று கொள்வதாக அறிவித்துள்ளது.

பிரணவ் தனவாதே ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மென், மேலும் அவர் தோனியை தனது லட்சிய ஆளுமையாக குறிப்பிட்டுள்ளார்.

பிரணவ் தனவாதே கூறுகையில், நான் எப்பவுமே பெரிய ஷாட்களை ஆடுவதில் விருப்பமுள்ளவன்.

நான் சாதனை நிகழ்த்துவேன் என்று எதிர்பார்க்கவில்லை. என்னுடைய இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினேன்.

முதல் பந்திலிருந்தே அடித்து ஆடுவது என்பதே எனது இயல்பான ஆட்டம் என பேசியுள்ளார்.

தற்போது இந்த இளம் சாதனையாளனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர் சச்சின் டெண்டுல்கர், பிரணவ் தனவாதேவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *