TRINCO NEWS
Search

பொன் அணிகளின் போர் (Battle Of The Golds )

Hindu collage  (7)Hindu collage  (3)

திருமலை இந்துக் கல்லூரி மைதானத்தில் பொன் அணிகளின் போர் (Battle Of The Golds ) கிரிக்கெட் ஆட்டம்-14.05.2016.

கிழ
க்கு மாகாணத்தில் புகழ் பூத்த கல்லூரியான திருகோணமலை ஸ்ரீ கோணேஷ்வரா இந்துக்கல்லூரியும் மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயமும் தமக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்தும் முகமாக மாபெரும் துடுப்பாட்ட போட்டியினை 1993ம் வருடம் தொடக்கம் நடத்தி வருகின்றனர்.

இரு பாடசாலைகளும் தங்களது கொடியின் நிறத்தில் பொதுவான மஞ்சல் நிறத்தை பொதுவாக கொண்டு தங்கத்திற்கான சமர் என்று இதனை பெயரிட்டுள்ளனர்.

இதன் முதல் போட்டி, திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியினரால் 15.09.1993 ம் வருடம் திருகோணமலையில், 20 ஓவர்கள் கொண்டதான மென்பந்து கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது.

இப்போட்டியில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் வெற்றி பெற்றனர்.

1994ம் வருடம் இரண்டாவது போட்டி மட்டக்களப்பில் கடினபந்து போட்டியாக மாற்றப்பட்டு நடத்தப்பட்டது, இதனை தொடர்ந்து இரு பாடசாலைகளும் மாறி மாறி போட்டியினை நடத்தி வருகின்றனர்.

இப்போது இப்போட்டி மட்டுப்படுத்தப்பட்ட 50 பந்து பரிமாற்றங்களை கொண்டதாக நடத்தப்படுகின்றது.

இது வரை நடைபெற்ற 22 போட்டிகளில் ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி அணியினர் 12 தடவைகளும். மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலய அணியினர் 10 தடவைகளும் வெற்றி பெற்றுள்ளனர்.

இவ்வருடம் இப்போட்டி 23வது போட்டியாக திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியினரால் நடத்தப்படுகின்றது.

கிழக்கு மாகாண விவசாய நீர்ப்பாசனம் கூட்டுறவு அமைச்சர் கௌர க.துரைராஜசிங்கம் பிரதம விருந்தினராகவும். திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் கௌரவ விருந்தினராகவும் அனுசரணை வழங்கும் டயலொக் நிறுவனத்தின் திருகோணமலை முகாமையாளர் வசந்தகுணரெட்ண விசேட விருந்தினராகவும் கலந்து சிறப்பிக்கின்றனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *