கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் இவ்வருடதிற்கான இப்தார் நிகழ்வு மாகாண சுகாதார அமைச்சர் ஏ எல் எம் நஸீர் அவர்களின் தலைமையில் கிழக்கு மகாண சபை முன்றலில் இன்று பிற்பகல் 5.00 மணியளவில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் கல்வியமைச்சர் கௌரவ திரு. தண்டாயுதபானி வீதிப் போக்குவரத்து அமைச்சர் கௌரவ ஆரியாவதி கலப்பதி அவர்களும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஆர் எம் அன்வர், சட்டத்தரணி ஜே எம் லாஹிர் , ஜனார்த்தனன் , நாகேஸ்வரன் போன்றோர்களும் சுகாதார அமைச்சின் மாகாண உயர் அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள் , அமைச்சின் ஊழியர்கள் மற்றும் ஊடக சகோதரர்கள் என பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.
