TRINCO NEWS
Search

இந்துக்கல்லூரியின்   பழைய மாணவர் ஒன்றுகூடல்

குச்சவெளி நிருபர் 

திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் ஒன்றுகூடல் சனிக்கிழமை மாலை கல்லூரி சிவலேவாகநாதன் அரங்கில் இடம்பெற்றது.  பிரதி வருடமும் யூன் 30ம் திகதி பழைய மாணவர் தினமாக அனுஸ்டிக்கப்படுகின்றது. இதன் நினைவாக ‘சாரல்’ என்னும் மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டது. கல்வி மற்றும் சமூக துறைகளில் உயர்நிலை அடைந்த பழையமாணவர்கள் இதன் போது கௌரவிக்கப்பட்ட வருகின்றார்கள். இவ்வருடம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மார்பு சிகிற்சை பிரிவு ஆலோசகர் மருத்துவர் சு.ரிஷிகேசவன், குச்சவெளி பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன்,  கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் வி.கௌரதரன்,  கல்லூரியின் முந்நாள் பிரதி அதிபர் இ.முருகதாஸ் ஆகியோர் இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.  இவர்கள் பொன்னாடை அணிவித்து மாலை அணிவிக்கப்பட்டு வாழ்த்து கேடயம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.  இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி பண்பாடு விளையாட்டு தகவல்தொழிநுட்ப அமைச்சர் சி.தண்டாயுதபாணியும் கலந்துகொண்டு சிறபித்தார். 


பாடசாலை மாணவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுயுக்கு பரீசுகளும் வழங்கி வைக்கப்ட்டதுடன் கடந்த வருடம் தேசிய மட்ட போட்டிகளில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற 23 மாணவர்களும் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்கள். 




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *