TRINCO NEWS
Search

முன் அறிவித்தலின்றி பரீட்சை

எதிர் வரும் திங்கட்கிழமை 11.07.2016 அனைத்து முஸ்லீம் பாடசாலைகளும் ஆரம்பமாகின்றது அனைவரும் அறிந்த விடயமே . இருப்பினும் அதே தினத்தன்று GCE O/L    மாணவர்களுக்கு கிழக்கு  மாகாண கல்வி திணைக்களத்தினால் பரீட்சை நடாத்தப்படவுள்ளது. இது தொடர்பாக சில மாணவர்களிடம் கேட்ட போது இதுவரைக்கும் தமக்கு அறிவித்தல் கிடைக்க வில்லை என்று கூறினார். சில அதிபர்களிடம் வினாவியபோது கடந்த இரு தினங்கள் விசேட விடுமுறை வழங்கப்பட்டதால் மாணவர்களுக்கு தங்களால் அறிவிக்க முடியாது போனதாகவும் கூறுகின்றனர். எது எவ்வாறு இருப்பினும் இது தொடர்பாக ஒரு மாணவரேனும் பாதிக்கப்பட கூடாது, அவ்வாறு பாதிக்கப்பட்டால் பொறுப்புக்கூற வேண்டியது கிழக்கு மாகாண கல்வி அமைச்சரும் அதிகாரிகளுமே.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *