TRINCO NEWS
Search

தாபரிப்பு பணம் செலுத்தாததால் விளக்கமறியல்

 எப்.முபாரக்              

  திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில்  தாபரிப்பு பணம் செலுத்தாது தலைமரைவாக இருந்த நபர் ஒருவரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் எச்.ஜி.தம்மிக்க இன்று ஞாயிற்றுக்கிழமை (31) உத்தரவிட்டார்.                              

  வான்எல பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்.                              குறித்த சந்தேக நபர் தனது இரண்டு பிள்ளைகளுக்கு மாதாந்தம் தாபரிப்பு பணமாக எட்டாயிரம் ரூபாய் செலுத்தி வந்த நிலையில் பத்து மாதங்களாக என்பதாயிரம் ரூபாய் செலுத்தாது தலைமரைவாக இருந்த நிலையிலே மனைவி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து சனிக்கிழமை (30) கந்தளாய் பொலிஸார் கைது செய்து இன்று(31) கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.                    சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.                              




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *