TRINCO NEWS
Search

ஹெரோய்ன் விற்பனை செய்த நபர் கைது

திருகோணமலை, சீனக்குடா பிரதேசத்தில் ஹெரோய்ன் விற்பனை செய்த நபரொருவரை  கைது செய்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடமிருந்து 14 மில்லிகிராம் ஹெரொய்ன் கைப்பற்றப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நபர் நீண்ட காலமாக ஹெரோய்ன் விற்பனையில் ஈடுபட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்த திருகோணமலை பொலிஸார், இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *