குணா கல்வி நிலையம் திருகோணமலை
**********************************************
நிசாந்தன் ஞாபகார்த்த கிண்ண கிரிக்கெட் போட்டியின் சில காட்சிகளும் நினைவுகளும்
அன்றைய நாட்களையும் விட்டு போன சில நினைவுகளையும் இப்போது மீட்டு பார்க்கின்றேன். ஆரம்ப கல்வியை அள்ளித்தந்த குணா கல்வி நிலையம் , அன்பான அறிவான ஆசான்களின் வழிநடத்தலில் வாழ்வை கழித்த காலம் இன்னும் பல நினைவுகளும் நண்பர்களும் நிகழ்வுகளும் நினைவுக்குள் வந்து வந்து போகின்றது.
மறைந்து போன ஆசான் நிசாந்தன் அவர்கள் என்னைப்போல் பல மாணவர்களின் மனதை விட்டு மறைய மறு க் கிறார். காரணம் அவர் பழகிய விதம் படிப்பு சொல்லி கொடுக்கும் விதம் அது மட்டும் அல்லாது அந்த நிறுவனத்தை ஆரம்பித்து முன்னோக்கி வளர்த்தெடுத்த அவருடைய முயற்ச்சி என்பவற்றை சொல்லலாம்.
இன்றைய நிறுவன நிர்வாகி செல்வன் என்று நினைக்கின்றேன் அவரிடம் நான் வணிகம் பயின்று இருக்கின்றேன் அதிலும் ஓர் பெருமை என்னவெனில் அவர் படிப்பிக்க ஆரம்பித்த முதலாவது மாணவர் குழாமில் நானும் ஒருவன்.அவர் நினைத்தால் போல் வணிக பிரிவில் ‘A’ சித்தி பெற்று அவருக்கு பெருமை சேர்த்தேன். என்மீது மிகுந்த நம்பிக்கையும் பாசமும் அக்கறையும் அவர் கொண்டிருந்தார். அவர் ஒரு சிறந்த ஆசிரியர். அவர் மாணவனாக எமக்கு வழி காட்டி எம்மை வளர்த்தெடுத்தார். நாம் சிறந்த பெறுபேறு பெற்று கொடுத்து அவரை ஒரு சிறந்த ஆசிரியராக வெளிக்கொணர்ந்தோம். இன்று அவருக்கு என்னை நினைவு இருக்காது என்று நினைக்கிறேன் ஆனால் எனக்கு என்றும் இவர்களின் நினைவு இல்லாமல் போகாது.
ஒரு ஆசிரியராக இருப்பதில் உள்ள நிறைவே இதுவாகத்தான் இருக்க முடியும் என நம்புகிறேன். இந்த சிறிய கருத்து பதிவை அவர் வாசிப்பார் என்ற நம்பிக்கையில் சொல்கிறேன், உங்களை போன்றவர்கள் வாழும் போதே வாழ்த்தப்பட வேண்டும் என்பதில் நான் தெளிவாக இருந்து கொண்டே வாழ்த்துகின்றேன்இன்னும் உங்களின் சேவை தொடர வேண்டும் என்று.
நிசாந்தன் ஆசிரியர் அவர்களின் ஞாபகார்த்த கிண்ண கிறிக்கட் போட்டியை சிறப்பாக நடாத்தி அகலாத நினைவுகளை நினைவுக்குள் கொண்டு வந்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறுவதுடன் அன்னாரின் ஆத்மா சாந்திக்காக அனைவரும் பிராத்திப்போமாக!
நன்றி
உங்கள்
குணநாயகம் டினேஷ்
Dinesh’s Facebook