கடந்த மூன்று வருடத்துக்கு முன்னர் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களின் ஆற்றல்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம் கனேடிய அரசின் நிதி உதவியில் சேர்ச் போர் கமெண்ட் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் மூலம் மேட்கொள்ளப்பட்டது
அவ் வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் பற்றி இன்று ரின்க்கோ ப்ளூ ஹோட்டலில் கலந்துரையாடியதுடன் . சமகாலத்தில் ஊடகவியலார்கள் சந்திக்கும் சவால்கள் பிரச்சினைகள் பற்றியும் ஆராயப்பட்டது .மேலும் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கத்துக்கு நிதி உதவி வழங்குவது சம்மந்தமாகவும் இதன்போது பேசப்பட்டன .கனேடிய உயர் ஸ்த்தணிகர் காரியாலய அதிகாரிகளான செலி வயிட்டிங் ஜேனிபார் ஹார்ட் ஆகியோர் ஊடகவியலாளர் சங்கத்தின் நிருவாக உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்