TRINCO NEWS
Search

திருமலையில் கடவுளுக்காக மனைவி, 2 பிள்ளைகளை வெட்டி பலி கொடுத்த கொடூரனின் முக்கிய தடயங்கள்

கன்னியா காட்டுப்பகுதியில் புதையல் இருப்பதாகவும் அதனை பெற்றுக்கொள்வதாற்காக இரண்டு பிள்ளைகளையும் பலி கொடுக்க வேண்டும் என தனது மனைவியிடம் இரு கதவுகளையும் மூடிக்கொண்டு கேட்டபோது தான் அதனை ஏற்றுக்கொள்ளாத நிலையில் இருவருக்குமிடையில் வாக்கு வாதம் ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தெரியாது எனவும் இரண்டு பிள்ளைகளையும் மனைவியையும் வெட்டிக்கொன்ற கொலை சந்தேக நபரான ராஜலஷ்மன் பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த பெண் தனது அக்காவிடம் கணவரான ராஜலஷ்மன் புதையல் பைத்தியத்துடன் திரிகின்றான். ஏதும் பிள்ளைகளுக்கு நடந்து விடுமோ என அக்காவிடம் கூறியதாகவும் உயிரிழந்த நித்தியாவின் அக்காவின் பொலிஸ் வாக்கு மூலத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொலை சந்தேக நபரான ராஜலஷ்மன் மேசன் வேலை செய்து வருவதாகவும் கடந்த 07 மாதங்களாக எவ்வித தொழில்களுக்கும் செல்லாமல் வீட்டில் அதிகளவில் பூசை வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவரது வீட்டுக்கு அருகிலுள்ள அவரது நண்பரான கே.கஜேந்திரன் (38வயது) தெரிவித்தார்.

trincomalee-03 trincomalee-04 trincomalee-06தான் பெற்ற இரண்டு பிள்ளைகளையும் வாழ்ந்து வளர்ந்து வந்த வீட்டில் மஞ்சல் கலந்த தண்ணீரில் குளிப்பாட்டி உயிரிழந்த மனைவியின் வீட்டுக்கு அழைத்துச்சென்று புதையலுக்காக பலி கொடுக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கையில் தனது இரண்டு பிள்ளைகளையும் வாளால் வெட்டிய சம்பவம் நேற்று (13) நடைபெற்றதுடன் திருகோணமலை நகரத்தையே சோகத்தில் ஆழ்த்தியது.

திருகோணமலை-கன்னியா -கிள்குஞ்சுமலைப்பகுதியில் 04வது ஒழுங்கையில் வசித்து வந்த ஒரு சந்தோசமான குடும்பத்தில் கணவருக்கு ஏற்பட்ட மூட நம்பிக்கையினால் இக்கோரச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது- தனது 10 வயது 08 வயது இரு மகளுடனும் பாசமாக இருந்த வந்த ராஜலக்‌ஷ்மன் பாடசாலைக்கு காலை தான் அழைத்துச்செல்வதுடன் பாடசாலை முடிவடைந்தவுடன் முற்சக்கர வண்டியிலேயே அழைத்து வந்ததாகவும் இரண்டு பிள்ளைகளுடனும் மிகவும் பாசமாக நடந்தவர் எனவும் தெரியவருகின்றது.

ராஜலக்‌ஷ்மனின் தந்தை அவரது மனைவியையும் அடித்துக்கொன்றதாகவும் அவர் ஆரம்ப காலத்திலிருந்தே விடுதலைப்புலிகளுடன் தொடர்பிருந்ததாகவும் இரகசிய விசாரணைகளின் மூலம் தெரியவருகின்றது.

தனது வீட்டுக்கு பக்கத்தில் பாரிய கல் மலையொன்று இருப்பதுடன் அதில் முகம் வடிவிலான உருவமொன்று காணப்படுவதாகவும் அவர் அந்த கல்லில் பதியப்பட்டுள்ள படத்தினை நாள் தோறும் பார்த்து வருவதாகவும் அதிகளவில் மந்திரம்- சூனியம் போன்றவற்றுடன் தொடர்பு பட்டவர் எனவும் நாள் தோறும் அவரது வீட்டு வளாகத்தில் அமைக்கப்ட்டுள்ள கோயிலுக்குள் பூசை நடாத்தி வருவதாகவும் அவரது நண்பரான ஆர்.கஜேந்திரன் தெரிவித்தார்.

கடந்த மாதம் செல்வநாயகபுரம் -புலியங்குளம் பகுதியிலுள்ள வராயம்மன் கோயிலில் பூசை நடாத்திய வேளை அங்கு உடைகளை கலைந்த வண்ணம் இவர் காணப்பட்ட நிலையில் இருந்ததாகவும் அவர் மந்திரத்தை நம்பி மூட நம்பிக்கையிலேயே இவர் இதனை செய்திருக்கலாம் எனவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும் இரண்டு பிள்ளைகளையும் மஞ்சள் தண்ணீரினால் குளிக்க வைத்து உயிரிழந்த மனைவுிக்கு தெரியாத வாரே தான் இடுப்பில் வாலை மறைத்து கொண்டு சென’றதாகவும் சந்தேகநபரான ராஜலக்‌ஷ்மன் பொலிஸாரிடம் கூறியிருக்கின்றார்.

trincomalee-15கொலையாாளி இரண்டு கதவுகளையும் மூடி பிள்ளைகளை பலி கொடுக்க மனைவியிடம் கேட்டதற்கு விருப்பம் தெரிவிக்காத நிலையில் தனக்கு பிளவு ஏற்பட்டதாகவும் அதன் பின்னர் என்ன நடந்தது என்பது தெரியாது என கூறிக்கொள்ளும் போது ஆரம்பத்தில் கதவை மூடிய வேளை சத்தம் கேட்டதாகவும் அதனையடுத்து அயலவர்கள் வீட்டு உரிமையாளரான அக்காவிற்கும் அதே வேளை பொலிஸ் அவசர அழைப்பு இலக்கமான 119 ற்கு தெரியப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விடயத்தை கேள்வியுற்ற உப்புவௌி பொலிஸார் அங்கு விரைந்த போது வெட்டிய வாளை கையில் ஏந்திய வண்ணம் கிட்ட வந்தால் வெட்டுவேன் என கூறிய மந்திரவாதி பின்னர் பொலிஸாரின் உதவியுடன் வாளுடன் கைது செய்யப்பட்டார்.

சிரார்களை வெட்டி கொலை செய்து அவர்களின் இரத்தத்தை வீட்டின் நான்கு மூலைகளிலும் தோட்டியிருந்ததாகவும் தெரியவருகின்றது.

இந்த சிரார்களை வெட்டியது இரத்தப்பலிக்காகவே என்ற விடயம் வௌியாகின்றது.

சந்தேகநபரான இவரை இன்று (14) திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாககவும் பொலிஸார் தெரிவித்தனர்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *