திருக்கோணமலை புல்மோட்டை கட்டுவலை கடற்றொழிலாளர்கள் தங்களின் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி கண்டனப்பேரணியுடன் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈட்பட்டனர்.
சுமார் 60 வருடகால தமது பாரம்பரிய இக்கட்டுவலை தொழில் மீதான ஒரு மாதகால தடையை நீக்கக்கோரியும் தமது அன்றாட வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்துமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
மேலும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் சுமார் 700க்கும் அதிகமான கடற்றொழிலாளர்கள் கலந்து கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
புல்மோட்டை தபால் நிலைய சந்தியில் இருந்து புல்மோட்டை கனிய மணல் கூட்டுத்தாபன சந்திவரை இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
புல்மோட்டையை பொறுத்தவரையில் இந்த கட்டுவலை கடற்றொழிலில் சுமார் 3500 குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது