TRINCO NEWS
Search

திருமலை மண்ணிலும் திமிறி எழுந்த காளைகள்..

திருமலை மண்ணிலும் திமிறி எழுந்த காளைகள்..

எங்கள் உயிர்கள் பறிக்கப்படும் போது தங்கள் தேகங்களை தீக்கிரை ஆக்கியவர்கள்.. நாங்கள் சிதைப்படும் போதெல்லாம் தங்களுக்குள் சீண்டெழுந்து கொண்டவர்கள் தான் ஆடாவிட்ட்டாலும் தன் தசை ஆடும் என்பார்கள் உங்களோடு உங்கள் உணர்வுகளோடு நாமும் இணைந்து கொள்கின்றோம் தமிழன் என்கின்ற உணர்வுகளோடும் திமிரோடும்..

15உலகின் எட்டு திசை எங்கிலும் வாழும் தமிழர்கள் தங்களின் பண்பாட்டினை காத்திட விழுமியங்களை வளர்த்திட தங்களின் கரங்களை இறுக பற்றிக்கொண்டார்கள். காளைகளையே கண்டிராத தெருக்களில் கூட காளைகளுக்கான போராட்டத்தை பார்த்து வெளிநாட்டு தெருக்கள் வியந்தது நிட்கிறது.. தன் மானம் மிக்க தமிழர்கள் ஒற்றுமை என்கின்ற ஒரே நேர்கோட்டில் உலகில் அவர்கள் எங்கிருந்தாலும் ஒன்றாக சேர்ந்து கொண்டார்கள் .. அமைதி என்றால் என்ன அகிம்சை என்றால் என்ன அறம் என்றால் என்ன என்பதை உலகிட்கு உணர்த்தி தங்கள் கொள்கைக்காக போராட்ட களத்தில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள் ..

பகைவர்கள் கூட வாழ்த்தும் அளவிட்கு தங்களின் போராட்ட்டத்தில் அவர்கள் சாதித்ததுதான் வரலாறு எழுதும் முகவுரையாக இருக்கிறது இருக்கும் பிரச்சனைகளுக்கும் முடிவுரையாகவும் இருக்கப்போகிறது..

எதுகுமே செய்ய முடியாது என்ற மத்திய அரசும், மூன்றாவது தடவையாகவும், அடுத்த வருடம் பார்க்கலாம் என்ற மாநில அரசும் ஒரே நாளில் சட்டம் இயற்ற வைத்த இளம் புரட்ச்சி காளைகளை எப்படித்தான் பாராட்டுவது. நடிகர் சங்கமும் தங்கள் பாட்டிட்கு சும்மா இருக்கவில்லை நடிக்கத்தான் செய்தார்கள். வழக்கு நிலுவையில் இருக்கும் போது அதை பற்றி பேசவே கூடாது என்று கதை விட்ட விஷால் எல்லாம் கடைசியில் என்ன ஆனார்கள் என்பது நகைப்புக்குரியது.

இதில் நாம் கற்று கொள்ள வேண்டியது ஒன்று இருக்கிறது.. நமது பகைவர்கள் யார் யார் என்பது தெளிவாகி விட்டது.. அரசியல் ஆட்சி நம் கையிலும் இல்லை, நமக்கானதாகவும் இல்லை என்பதும் புரிந்து விட்டது.. நம்மை விரட்டி பார்த்தார்கள்.. அடித்து பார்த்தார்கள் ஓரிருவரை கைது செய்தும் பார்த்தார்கள். எல்லோரும் ஒன்றாக கூடிட நம் காலடியில் மண்டியிட்டு கொண்டார்கள். ( காலை வாரத்தான் பார்ப்பார்கள் கவனம் )

உலக தமிழர்கள் அனைவரும் ஒன்றாக இருக்கின்றோம். ஒரே பாதையில் நிட்கிரோம் பயணப்படுகிறோம் ஆனால் எங்களுக்கான அடையாளங்களை அழிப்பதற்கு எதிரியும் பலமாகவே இருக்கிறான்..

அவர்கள் நம் அருகில் இருக்கிறார்கள் நம்முடனேயே இருக்கிறார்கள் நமக்குள்ளேயே இருக்கிறார்கள் அதனால் தான் அவர்கள் எமக்கு ஆபத்தானவர்கள் அதி பலசாலிகள் உண்மை தமிழினத்தை உலகெங்கும் அகதிகளாக்கி அவர் தம் மண்ணில் அவர்களின் தலைவிதியை தீர்மானிக்கவல்ல அத்துணை தலைமை பொறுப்புகளையும் அபகரித்து கொண்டவர்கள். எதற்கு எடுத்தாலும் அவர்களிடமே இறுதியில் போய் நிற்க வேண்டிய அளவுக்கு தங்களின் இரும்பு பிடிக்குள்ளே இறுமாப்பாய் அமர்ந்து இருக்கிறார்கள்.. அதனால்தான் அவர்களுக்கு எல்லாமே சாத்தியமாகி போகிறது .

ஈழத்தை ஈன மாக்கினார்கள்.. கூடங்குளத்தை குப்பைகளாய் எமக்குள் கொட்டினார்கள். மீத்தேன் திட்டத்தை எமது மண்ணில் போட்டார்கள். காவேரியில் கை கட்டி வேடிக்கை பார்த்தார்கள்..எழுவர் விடுதலையை முடியாது என்கிறார்கள் இன்னும் பல திட்ட்ங்கள் அவர்களுக்குள்ளே இருக்கிறது .. முடிவு எம் இனம் எம் தலைமுறை எமது கலாச்சாரம் பண்பாடு அத்தனையும் அழிப்பது.. தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது.. காரணம் எமக்கு இருக்கும் தனி சிறப்பு வரலாறு கலாச்சாரம் பண்பாடு எதுகும் அவர்களுக்கு கிடையாது. எமது அறிவு திறனும் ஆக்க பூர்வமான செயல்பாடுகளையும் அவர்களால் பொறுத்துக்கொள்ளவும் முடியாது..

நாங்கள் வளமானவர்கள் அன்பானவர்கள் பண்பானவர்கள் அதனால்தான் அவர்கள் தங்கள் மண்ணில் இருந்துகொள்ள முடியாமல் எமது மண்ணுக்கு பொழைப்பு தேடி வந்தார்கள்.. அதிலும் நமது சிறப்பு வந்தாரையெல்லாம் வரவேற்று வாழவைத்து அழகு பார்ப்பது .. எமது மடியிலேயே உட்காந்து கொண்டார்கள் .. கொண்டவர்கள் சும்மா இருக்கவில்லை நமது தலையையும் பிடித்து கொண்டார்கள் .. இப்போ கழுத்தை நெரிக்கும் அளவிட்கு போய் விட்ட்டார்கள்..

இல்லை என்றால் தமிழர் அல்லாதவர்கள் எல்லோராலும் எப்படி எமது அரசியலுக்குள் வர முடிந்தது .. பெரிய பெரிய பொறுப்புகளில் எல்லாம் அவர்களால் எப்படி உட்கார முடிகிறது. அண்மையில் நடந்த நடிகர் சங்க பிரச்சனை கூட இப்படித்தான் .. எவ்வளவு லாபகரமாக எல்லோரையும் ஏமாற்றி தனக்கே வாக்கு போட வைத்து விஷால் வந்து அங்கே உட்கந்து கொண்டார் என்று நமக்கு தெரியும்.. இப்போ எந்த பிரச்சனைக்கும் நடிகர் சங்கம் போராடாதாம்.. இப்படித்தான் எல்லா இடத்திலும் அவர்கள் கை ஓங்கியது ஓங்கி இருக்கிறது .. இதற்க்கு சில காசுவாங்கும் உண்மை தமிழ் பொறுக்கிகளும் காரணம்..

இந்த நாதாரிகளுக்கு ராஜபக்ஷ நண்பனாம் போராடும் தமிழ் இரத்தங்கள் எல்லாம் பொறுக்கிகளாம். ஒரு 68 வயசு கெழவி சொல்லுது … ? சீ இதெல்லாம் பற்றி பேசவே வாய் கூசுது. இதுகள் எல்லாம் பொழைப்புக்காக நம் இனத்தையே விக்கும் கூட்ட்டம் . நமது துரோகிகள் ..அவர்கள்தான் எம்மை அளித்து பணம் புகழ் சம்பாதிப்பவர்கள் ..

எமது எதிரிகள் யார் என்பதில் நாம் தெளிவாக இருப்போம்.. இருக்கும் அத்துணை தலைமை பொறுப்புகளையும் நிர்வாகம் சார்ந்த அறிவார்ந்த தமிழ் தலைவர்களிடம் கொடுப்போம் .. கூகிளின் தலைமைக்காக அமெரிக்கா தமிழ்நாட்டுக்கு வந்துருக்கு . ஜிமைலின் தந்தையாக ஒரு தமிழன் உலகில் புரட்ச்சி செய்கிறான். இந்தியாவின் அறிவு விஞ்ஞானி ஆசானாக மறைந்த அப்துல் கலாம் அவர்கள் .. இப்படி எத்தனையோ பெரிய பெரிய தலைவர்களாக தமிழன் இருக்க .. நமது தமிழ்நாடடை யாரோ யாரோ எல்லாம் ஆழ்வதும் ஆழ நினைப்பதும்தான் இன்றைய எல்லா நிலைக்கும் அழிவுகளுக்கும் காரணம் ..

ஈழத்தில் எத்தனை உயிர்களை நாம் காவு கொடுத்தோம். ஒவ்வொருநாளும் தமிழ் ரத்தத்தில் அந்த பூமி குளிக்க மழை பெய்கிறது தூவானம் அடிக்கிறது என்றெல்லாம் எவ்வளவு இலகுவாக இவர்களால் கடந்து போக முடிந்தது . சின்னம் சிறுசுகள் இளம்பெண்கள் முதியோர்கள் என்றெல்லாம் வேறு பாடு இல்லாமல் ஒரே இடத்தில் சத்தமேதும் இன்றி கொலை வெறியும் குத்துயிருமாய் அழித்தொழிக்க பட, போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று எப்படி எம் தலைமுறைக்கே வியாக்கியானம் செய்ய இவர்களால் இயன்றது தெரியுமா. எப்படி எம்மை நசுக்கினார்கள் ஏளனம் செய்தார்கள் இறுக கரம் கொண்டு எம்மை அடக்கினார்கள்.. எல்லாம் நம் தலைமை இல்லாததுதான் நம்மிடம் அதிகாரம் இல்லாமைதான் காரணம்.

நமது தலைவர்கள் நமக்குளேயே இருக்கிறார்கள் அவர்கள் நம்முடனேயே பயணப்படுகிறார்கள் நமக்காக சோர்வின்றி உழைக்கிறார்கள். அவர்களை நமது தலைமை பொறுப்புகளுக்கு கொண்டு வர வேண்டியது நமது கடமை.. அவர்கள் கையில் நாட்டை கொடுப்பது நம் எதிர்காலத்துக்கான நன்மை .

இவ்வளவு படித்த அறிவார்ந்த தமிழினத்தின் பிள்ளைகள் எல்லாம் ரோட்டில் இருக்க, ஜெயலலிதாவின் ஆயாவை முதல்வராக்க துடிப்பதும் அந்தம்மா இந்தம்மா என்று முதுகு வளைய கெஞ்சுவதும் எவ்வளவு கேவலமானது நண்பர்களே. நம் இனத்தின் சாபக்கேடு வேறென்ன இருக்க முடியும்? நம் எதிரி கூட இதை நினைத்து சிரிப்பான், நம்மை பார்த்து என்ன நினைப்பான் தோழர்களே .. 2017 ம் ஆண்டின் மிக சிறந்த கேவலமாக இதுதான் இருக்க முடியும் .. நானெல்லாம் ஒருதமிழனாக வெட்கி தலைகுனிகிறேன் சே…..

அதிமுக்கவில் இருக்கும் முதுகெலும்பு இல்லாதவர்கள் எல்லாம் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொள்ளுங்கள். திமுக்க நீங்களும் கொஞ்சம் ஒதுங்கிக்கொள்ளுங்கள்.

நாம் கண்ட நிகர் இல்லா ஆளுமை. கறையில்லா வெள்ளை மனிதன் இந்த மானுடம் போற்றும் தூய புனிதன் திரு சகாயம் ஐயா அவர்களை நாம் தலைமை ஏற்க அழைப்போம் . எம் இளம் தலைவர்கள் அனைவரும் அவர் வழிகாட்டிடலில் வலம் வரட்டும் அந்த அறிய காட்ச்சியை நாம் அனைவரும் காண வேண்டும். இதை நாம் தான் உருவாக்க வேண்டும்.. இது மட்டும் நடந்தால் தமிழினம் தலை நிமிரும்

இன்னும் பலர்ர்களின் அறிவு பூர்வமானதும் ஆளுமை மிக்கதுமான பங்களிப்பு வியப்படைய வைக்கிறது . இவர்களை போற்றுவோம் கொண்டாடுவோம் எதிர்கால தலைவர்களாக மாற்றுவோம் ..

இவர்கள் சரியானவர்கள் சிறந்த அறிவாளிகள் தலைமை பண்பு கொண்டவர்கள் தூர எதிர்கால சிந்தனை கொண்டவர்கள் .. எல்லாவற்றுக்கும் மேலாக நம் தமிழ் பிள்ளைகள். தமிழன் எங்கு அடிபட்டாலும் இவர்களுக்கு முதலில் வலிக்கும் எனவே தமிழன் என்றாலே எல்லோரும் பயப்படுவார்கள் வியப்பார்கள் வழி விடுவார்கள் இதுதான் தற்போதைய தேவை நாம் செய்ய வேண்டியது..

எழுக தமிழ் வெல்க தமிழ் சரித்திரம் படைக்கும் தமிழ் ..

நன்றி
உரிமையோடு உங்களில் ஒருவன்
குணநாயகம் டினேஷ்
(திருகோணமலை)

21

22

23

19

20

15

14

9

16

17

18

13

12

11

10

8

7

6

5

4

3
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *