TRINCO NEWS
Search

சிக்கினான் சுவாதி கொலையாளி: செங்கோட்டையில் போலீசார் சுற்றிவளைத்தனர்

சென்னை: சென்னையில் பெண் பொறியாளர் சுவாதியை கொலை செய்த கொலையாளி நள்ளிரவு கைது செய்யப்பட்டான்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதி, கடந்த மாதம் 24ல் மர்ம நபரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தப்பிச் சென்ற கொலையாளியை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். போலீசாருக்கு கிடைத்த சிசிடிவி கேமரா பதிவுகளின் அடிப்படையில் குற்றவாளியின் மாதிரி வரைபடத்தை போலீசார் வெளியிட்டனர். தொடர்ந்து பல இடங்களிலும் கொலையாளியை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், சுவாதியை கொலை செய்த கொலையாளி நள்ளிரவில் நெல்லையில் கைது செய்யப்பட்டான்.

கொலையாளியின் பெயர் ராம்குமார் என்றும், போலீசார் தன்னை நெருங்கியதை அறிந்த அவன், கழுத்து அறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, கொலையாளி ராம்குமார் கைது செய்யப்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட ராம்குமார், 24 நெல்லை மாவட்டம் செங்கோட்டையை சேர்ந்தவன்; பி.இ., பட்டதாரி. வேலை தேடி சூளைமேடில் தங்கியிருந்த ராம்குமார், சுவாதியை ஒருதலையாக காதலித்துள்ளான். கடந்த 3 மாதங்களாக முயற்சித்தும் சுவாதி காதலை ஏற்காததால் வெறுப்படைந்த ராம்குமார் நண்பன் ஒருவன் உதவியுடன் கொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலையாளி ராம்குமாரை சென்னை கொண்டுவர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது உண்மையா என்று இன்னும் உறுதியாக தெரியவில்லை அப்படி உண்மை என்றால் மற்ற எல்லா பெண்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணி படிக்கும் பொழுதோ, வேலைக்கு செல்லும்பொழுதே இதுபோல் ஆண்கள் தொந்தரவு செய்யும்பொழுது அதை வீட்டில் உள்ளவர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லுங்கள் பல பெண்கள் இப்படி வழிப்போக்கர்கள் செய்யும் தொடர் தொல்லைகளை பொறுத்துக்கொண்டு வீட்டுக்கு சொல்வதில்லை. எங்கு இதை வீட்டில் சொல்லி பெரிதுபடுத்தினால் தங்கள் படிப்பும் உத்தியோகமும் பாதிக்கப்பட்டு விடுமோ என்று பயந்து மறைத்து விடுகிறார்கள் அதன் விளைவுதான் இதுபோன்ற சம்பவங்கள் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நண்பர்கள்போல் பாவித்து அவர்களின் எண்ணங்கள், மனதில் உள்ளவற்றை தெரிந்துகொள்ள வேண்டும். இந்த பெண் சுவாதியும் அப்படித்தான் இந்த விஷயத்தை பெற்றோர் இடத்தில் சொல்லி அவனை மாட்டிவிடாமல் இருந்துவிட்டார் அதனால் அந்த பைத்தியாகாரனிடம் கொலையுண்டார் கொடுமையிலும் கொடுமை பெண்களுக்கு பாதுகாப்பே இல்லையா? சில பைத்தியங்கள் சிலரை பார்த்தவுடன் காதலில் விழுவதும் அவர்களை தொடந்துசென்று தொல்லை கொடுப்பதும் நித்தம் நடக்கிறது இதற்க்கெல்லாம் தனி சத்தம்போட்டு இதுபோன்ற கொடூர புத்திகொண்டவர்களை மனநல மருத்துவமனையில் சேர்த்து சிகிசிச்சை அளிக்க வேண்டும் இல்லையேல் இன்னும் பல சுவாதியை, வினு பிரியாக்களை நாம் பலிகொடுக்க வேண்டிவரும். பெண் குழந்தைகளே நீங்கள் சமூகத்தில் எதிர்கொள்ளும் எந்த பிரச்சனை ஆயினும் பெற்றோரிடம் சொல்லுங்கள், நண்பர்களிடம் பகிருங்கள். இப்படி நீங்கள் மூடிவைத்தால் அது ஆபத்தில் முடிய வாய்ப்புள்ளது



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *