TRINCO NEWS
Search

கிழக்கு மாகாண பாடசாலைகளை வலுப்படுத்த இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகள், சமூக நிறுவனங்களை வலுப்படுத்தும் முகமாக இன்று கிழக்கு மாகாண கல்வி அமைச்சில் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

கணனி, Multimedia Projecter, போட்டோ பிரதி இயந்திரம் ஆகியவை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் திரு.சி. தண்டாயுதபாணி அவர்களினால் வழங்கப்பட்டது.

கிழக்கு மாகாண சபை அமைச்சர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் ஒரு பகுதியாக, 15 பாடசாலைகள் மற்றும் நிறுவனங்களுக்கு 2000 000 ரூபா பெறுமதியான அலுவலக உபகரணங்கள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்த உதவிகளை பெற்றவர்கள் அதனை துஷ்பிரயோகப்படுத்தாமல் முழுமையாக பயன்படுத்துமாறு மாகாண அமைச்சர் கேட்டுக் கொண்டார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *