TRINCO NEWS
Search

நல்லிணக்கப் பொறிமுறைகள்  பற்றிய கலந்தாலோசனை


நமது நாட்டில் நல்லிணக்கத்தையும்  நிரந்தர சமாதானத்தையும் ஏற்படுத்தும்  நோக்கில் அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள நல்லிணக்கப் பொறிமுறைகள் தொடரபான பொதுமக்களின்  கருத்துகளை  கேட்டறிவதற்கான  வலய மட்ட கலந்தாலோசனைச் செயலணியின் பொதுமக்கள் சந்திப்பு  செவ்வாய்க்கிழமை   23ஆம் மூதூர் த்ரீ சீடி  மண்டபத்திலும் , 24ஆம் திகதி  குச்சவெளி பிரதேச செயலகத்திலும்  26ஆம் திகதி வெருகல் பிரதேச செயலகத்திலும் 28ஆம் திகதி திருகோணமலை கச்சேரியிலும் நடைபெறவுள்ளது .

பின்வரும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான பொதுமக்கள்  கருத்துக்களும் அபிப்பிராயங்களும் வாய்மொழிமூலமாகவோ எழுத்து மூலமாகவோ இச் செயலணியிடம் தெரிவிக்கலாம் 

1.)விசேட வழக்குத்தொடுப்பவரை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறை 

2) .உண்மை நீதி நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஆணைக்குழு  

3.காணாமல் போனோர் தொடர்பான விடயங்களை  கையாள்வதக்கான  அலுவலகம் 

4.)இழப்பீடுகளுக்கான அலுவலகம் 

இவற்றுடன் நீதியையும் உண்மையையும் நல்லிணக்கத்தையும் ஏட்படுத்துவதக்கான வேறு பொறிமுறைகள் மற்றும் வழிவகைகள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வைக்க முடியுமென வலய மட்ட கலந்தாலோசனை செயலணியின் அலுவலர் நூருல் இஸ்மியா தெரிவித்தார்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *