TRINCO NEWS
Search

குச்சவெளியில் நல்லிணக்கப் பொறிமுறை

நல்லிணக்கப் பொறிமுறைகள்  பற்றிய கலந்தாலோசனைக்கான செயலணியின் பொதுமக்களின்  கருத்துகளை  கேட்டறிவதற்கான  வலய மட்ட கலந்தாலோசனைக் கூட்டம் இன்று, 24ஆம் திகதி  குச்சவெளி பிரதேச செயலக கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.

பின்வரும் நல்லிணக்க பொறிமுறைகள் தொடர்பான பொதுமக்கள்  கருத்துக்களும் அபிப்பிராயங்களும் வாய்மொழிமூலமாகவும் எழுத்து மூலமாகவும் ச்மர்ப்பிக்கப்பட்டன.இச் செயலணியிடம்   

1.)விசேட வழக்குத்தொடுப்பவரை உள்ளடக்கிய நீதிப்பொறிமுறை 

2) .உண்மை நீதி நல்லிணக்கம் மற்றும் மீள் நிகழாமை தொடர்பான ஆணைக்குழு 

3.காணாமல் போனோர் தொடர்பான விடயங்களை  கையாள்வதக்கான  அலுவலகம் 

4.)இழப்பீடுகளுக்கான அலுவலகம் 

இவற்றுடன் நீதியையும் உண்மையையும் நல்லிணக்கத்தையும் ஏட்படுத்துவதக்கான வேறு பொறிமுறைகள் மற்றும் வழிவகைகள் தொடர்பிலும் கருத்துக்களை முன்வவைத்தனர் என வலய மட்ட கலந்தாலோசனை செயலணியின் தலைவி நூருல் இஸ்மியா தெரிவித்தார்

யுத்தத்தில் பாதிக்கப்பட்ட குச்சவெளி  பிரதேச த்திலுள்ள 200 பேர் பங்குபற்றினர்.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *