TRINCO NEWS
Search

நிதி வசதிகள் போதியளவில் வழங்கப்படுவதில்லை கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சி.தண்டாயுதபாணி

கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறையை நவீன மயப்படுத்துவதற்கான நிதி வசதிகள் போதியளவில் வழங்கப்படுவதில்லையென கிழக்கு மாகாண கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சி.தண்டாயுதபாணி தெரிவித்தார்.

கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் இறுதி விளையாட்டு போட்டிகள் இன்று மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இதனை கூறியுள்ளார். இந்நிலையில், கிழக்கு மாகாணத்தில் விளையாட்டுத்துறையினை நவீன மயப்படுத்த தேவையான நிதியை மத்திய அரசிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் மேற்கொள்ளவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹமட் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *